×
 

#Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!

நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 25 காசுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதனுடைய விலையிலும் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு அமலுக்கு வந்திருக்கிறது. 

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 79 காசுகள் அதிகரித்து 104 ரூபாய் 46 காசுகளுக்கு விற்பனையாகிறது.  சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்த்தப்பட்டு, 96 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த வாரம் 3 ரூபாய்க்கும் மேல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மறுபடியும் 749காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது. 

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலினுடைய விலையானது கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த மூன்று நான்கு தினங்களுக்கு முன்னர் ஒரு விலை உயர்ந்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஒருமுறை விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 79 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 46 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல டீசலின் விலையையும் இன்று அதிரடியாக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 25 காசுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதனுடைய விலையிலும் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு அமலுக்கு வந்திருக்கிறது. 

இருப்பினும் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட சிஎன்ஜி எரிவாயு வாகன ஓட்டிகளுக்கு ஓரளவுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் அதனுடைய விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் சிஎஜினுடைய விலையானது ஒரு கிலோ 91 ரூபாய் 50 காசு என்ற விலையில் ஒரே நிலையிலேயே நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: மக்கள் பாக்கெட்டுக்கு மீண்டும் அடிதான்! எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்..!

ஆனால் பெட்ரோல் டீசலினுடைய விலை உயர்வு மட்டும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி இரவு 87 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுகள் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் ஆனது. இன்று 79 காசுகள் உயர்ந்து 104 ரூபாய் 46 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசலினுடைய விலையும் கூட கடந்த அதேபோலவே கடந்த 15ஆம் தேதி விலை ஏறி இருந்தது. அதற்கு பிறகு தற்பொழுது டீசலினுடைய விலையும் ஏறி இருக்கிறது. 86 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 11 காசுகளாக இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: உயருகிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வதந்திகளை நம்பாதீங்க..!! விளக்கம் அளித்த மத்திய அரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share