×
 

100% பயிர் காப்பீடு... மண் முதல் மகசூல் வரை..! வேளாண் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்..!!

வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இலவச மின் இணைப்பு திட்டத்திற்கான 7432.58 கோடி மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். வேளாண் விளைப் பொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் குருவை தொகுப்பு திட்டத்திற்கு 132 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "வாழ்த்துங்க முதல்வரே... தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்.. CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வினோத்..!!

மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் ஏக்கருக்கு தலா நான்காயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ம வேளாண் பரவலாக சிறப்பு திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் எட்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு 4.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share