சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!
எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான சிவி சண்முகம் கருத்துக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில் கொடுத்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கால் தான் 47 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதாக அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு சி.வி. சண்முகம் பதிலடி கொடுத்திருந்தார். ஏழு மாவட்டங்களில் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த செல்வாக்கால் அதிமுக வென்றதாக கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார். வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம்… தோற்றால் மாவட்ட செயலாளர் காரணமா என்று கேட்டார். 47 தொகுதிகளில் மட்டும் தான் வெல்ல முடிகிறது என்றால் ஏன் மீதமுள்ள தொகுதிகளில் இபிஎஸ் செல்லாக் காசா என்று கேட்டார்.
கே.பி முனுசாமி சட்டமன்றத் தேர்தலில் தோற்றத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று வரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றும் தென் மாவட்டத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
வடமாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிக்கு காரணம் பாமக தான் என கூறி இருந்தார். சி.வி.சண்முகம் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில் அளித்தார். அதிமுக பொதுச் செயலர் கூட்டிய கூட்டத்துக்கு ஏன் சி.வி.சண்முகம் வரவில்லை என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: டெல்டாவிலும் அதிமுக வாஷ் அவுட்..!! EPS செல்லாக்காசா.?! சி.வி. சண்முகம் மீண்டும் தாக்கு.!
விழுப்புரத்தில் முன்பு போட்டியிட்ட சி.வி.சண்முகம் ஏன் தோற்றுப் போனார் என்றும் கேட்டுள்ளார். திமுகவுடன் அதிமுக பேசவில்லை என்று சத்தியம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். வரும் தேர்தல்களில் கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!