×
 

போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை: அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வளர்மதியின் கணவரான பாலசுப்பிரமணியன் (79), ஓட்டுப்பதிவு நடைபெற்ற நேற்று முன்தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டோக்கன் வழங்கி வருவதாகக் கூறி, அவர் வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அருகே அ.தி.மு.க. கொடியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, பாலசுப்பிரமணியன் சாலையில் படுத்து மேலும் போராட்டம் செய்தார். போலீசார் அவரைத் தூக்கி அப்புறப்படுத்தியபோது, அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

இச்சம்பவத்துக்குப் பிறகு, போலீசார் தன்னைத் தாக்கியதாகக் கூறி பாலசுப்பிரமணியன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தச் சம்பவம் ஆயிரம் விளக்கு தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரின் கணவரின் இந்தப் போராட்டம் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வினர் இந்த வழக்கை அரசியல் பழிவாங்கல் என்று கூறி வருகின்றனர். மறுபுறம், போலீசார் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதாகவே தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில் சென்னையில் ஏற்பட்ட மற்றொரு பரபரப்பான நிகழ்வாக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்த முறை இரட்டை இலை தான்..! ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி வாக்குச் சேகரிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share