அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தரசிகளுக்கு அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் சேர்த்து, மொத்தம் 297 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ உள் இட ஒதுக்கீட்டை, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 10 சதவீதமாக (10% Medical Reservation) உயர்த்தி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் வாய்ப்பு ஏற்படும்.
ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை நிதியுதவியாக ரூ.10,000 வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை தற்போதுள்ள நிலையில் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
இதையும் படிங்க: நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம் என்றார். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவி்த்தார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
கட்டணமில்லாப் பேருந்து பயணமாக, தற்போது பெண்கள் மட்டுமே அனுபவித்து வரும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயண வசதி, ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்துக் கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
அவர்களின் பிள்ளைகளுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். வீடற்ற குடும்பங்களுக்கு 'அம்மா இல்லம்' திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 ஒருமுறை உதவித்தொகையாக வழங்கப்படும்.
முதியோர் பென்ஷன் மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் மட்டுமே நடக்கிறது. தமிழ்நாடு போதைமயமாகிவிட்டது. மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் திமுகவை அகற்றி, தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகிவிட்டனர்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!