×
 

மடப்புரம் அஜித் கொலை வழக்கு... என்ன நடந்துச்சு? நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா ஆஜர்..!!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் நிகிதா ஆஜரானால்.

மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். 

இதற்கிடையில், அஜித் குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது. மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!

இந்த நிலையில், நகை திருடியதாக கொடுத்த புகாரில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்காக நிகிதா ஆஜராகி இருக்கிறார். அஜித் குமார் கொலை வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் ஆஜராகி உள்ளார்.  

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பகீர் தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share