×
 

என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!

பொய் புகார் கொடுத்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித் குமார் தாயார் வலியுறுத்தினார்.

மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தெரிவித்தது.

மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அஜித்குமாரின் தாயார் மாலதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எனது மகன் நகை திருடியதை பார்த்தது யார் என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினார். இரவு 10 மணிக்கு மேலாகயும் தனது மகன் வராததால் அச்சமடைந்து விசாரித்ததாகவும், இதில் ஈடுபட்டவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

நிகிதாவை கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தனது வயிறு எரிவதாகவும், செய்யாத குற்றத்திற்காக தனது மகனை அடித்துக் கொன்றதாகவும் வேதனை தெரிவித்தார். மிளகாய் பொடி தூவி, குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் கொலை செய்து விட்டதாகவும் இதெல்லாம் உங்கள் சட்டத்தில் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். என் மகன் என்ன தீவிரவாதியா என்றும் முறையாக விசாரித்து இருக்க வேண்டும் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share