×
 

அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.

மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. கொலை செய்பவர்கள் கூட இந்த அளவுக்கு தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 42 இடங்களில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதும் உடற்கூறு ஆய்வின் மூலம் தெரிய வந்த நிலையில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தெரிவித்தது. மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!

இந்த நிலையில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிஎஸ்பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.எஸ்.ஐ. சிவகுமார், ஹெட் கான்ஸ்டபிள் இளையராஜா உள்ளிட்ட நான்கு பேரும் வரும் 25ம் தேதி CBI விசாரணைக்கு ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: மான நஷ்ட வழக்கு... 12 ஆம் தேதி வரைக்கும் டைம்..! ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share