எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!
கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி முடிவுகளை விரைவாக எடுத்து வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணி ஏறக்குறைய இறுதி வடிவம் பெற்றுள்ளது. திமுகவும் காங்கிரஸுடன் தனது பழைய கூட்டணியை உறுதி செய்து, மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. கூட்டணி விவகாரம் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதையும் படிங்க: நாளை தேமுதிக மாநாடு..! யாருடன் கூட்டணி?.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் பிரேமலதா..!
அப்போது, கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இன்று தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறினார். இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை என்று தெரிவித்தார். கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். வெகுவிரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம் என கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு யாரும் எதிரி இல்ல.. விஜய் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பளீச் பதில்..!