×
 

“போட்டுத் தாக்கு...” - உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கட்-அவுட்டில் அஜித்... திமுக உடன்பிறப்புகள் அட்ராசிட்டி...!

வத்தலகுண்டில் உதயநிதி பிறந்தநாள் விழா கட் அவுட்டில் அஜித் படம் இடம் பெற்றுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கமாக அன்பகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அறிவாலயத்தில் வெகு விமர்சையாக தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் உதயநிதியின் பிறந்தநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும் நோயாளிகளுக்கு பால், ரொட்டி, பழம், போர்வை வழங்கியும் ஆதரவற்ற காப்பங்களில் அன்னதானம் வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரத்த தான முகாம், இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட சேவைகளையும் வழங்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!

உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் திமுகவினர் சென்னை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்துள்ளனர்.  அந்த வகையில் வத்தலகுண்டுவில் திமுகவினரால் வைக்கப்பட்டுள்ள கட்- அவுட் ஒன்று சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் அணி சார்பில்  உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி மிகப் பிரமாண்ட கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது 
இந்தக் கட்டவுடில் நடிகர் அஜித் இடம்பெற்றுள்ளது  .

பல்வேறு விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் படத்துடன் கார் ரேசில் கலந்து கொண்ட அஜித்தின் படமும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அந்த கட்டவுட்டில் இடம் பெற்றிருந்தது  பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசியலில் வேகம் பெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்களை திமுகவின் பக்கம் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற முயற்சிகள்  நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கரூர் சம்பவம்: சிபிஐ-யின் அதிரடி மூவ்... உயிரிழந்தவர்களில் 9 குடும்பத்தினரிடம் கிடுக்குபிடி விசாரணை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share