×
 

இளைஞர் அஜித் காவல் மரணம்...ரூட்டை மாற்றிய நீதிபதி! திடீர் திருப்பம்.

அஜித் குமார் கொலை சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ டி எஸ் பி சண்முகசுந்தரம் நீதிபதி முன்பு ஆஜராகிய நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்காக தான் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கொலை வழக்காக மாற்றி ஐந்து காவலர்களை சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கூட ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், இது சாதாரண கொலை அல்ல... அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்ற குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

இதை அடுத்து சிவகங்கை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நீதி விசாரணை நடைபெறும் என்றும் சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒரு 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனையடுத்து, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து தனது விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து இந்த சாரணையை நடத்தி வரும் நீதிபதி டி எஸ் பி., ஏ டி எஸ் பி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

அஜித் குமாரை அடித்துக் கொன்ற சிறப்பு படை போலீசாரை அனுப்பிய ஏ டி எஸ் பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். திருபுவனம் ஏ டி எஸ் பி சுகுமார், ஆய்வாளர் ரமேஷ் குமார், தனிப்படை எஸ்.எஸ்.ஐ. ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் வரும் ஆஜராகினர்.  ADSP சண்முகசுந்தரத்திடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 2 மணி நேரமாக விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share