எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...
50 மாத ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் சந்தித்த கொடுமைகளை தனது சுற்றுப்பயணத்தில் எடுத்துக் கூற இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தான் மக்களை சந்திக்க செல்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தன்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு முதலமைச்சர் அவரைப் பற்றிய பேசிக் கொள்வதாக தெரிவித்தார். எப்போதும் மக்களோடு பேசிக் கொண்டிருப்பவன் நான் என்றும் அதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் எனவும் மக்களின் குரலாக அதிமுகவும் தானும் ஒலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே தனது சுற்றுப்பயணம் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம் விடியா ஆட்சியை பற்றி எடுத்துரைத்து மாற்றம் கொண்டு வருவது தான் நோக்கம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று குற்றம் சாட்டியை எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்லி கொடுங்கோல் ஆட்சி அகற்றுவதே நோக்கம் என கூறினார்.
இதையும் படிங்க: இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்...Z+ பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தது அதிமுக என்றும் ஏழாம் தேதி தனது சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாகவும், 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவேன் எனவும் அதிமுக 2026 இல் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதற்காக சுற்றுப்பயணம் கொள்கிறோம்., அதிமுக வரலாறு படைக்கும் என்றும் தெரிவித்தார். பொய்யை மூலதனமாகிய திமுகவின் பற்றி எடுத்துச் சொல்வேன் என கூறிய அவர், அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எடுத்து கூறி பிரச்சாரம் செய்வோம் என்றும் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அழைத்து மக்களை ஏமாற்றி வந்தது திமுக என்றும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட்டணியில் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்தும், அதிமுக தலைமையில் ஆட்சி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டார் என்றும் அமித்ஷா கூறிய பின்னர் அதற்கு அடுத்து யார் பேசினாலும் அது சரியில்லை என்பதே தனது கருத்து என்று கூறினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அஜித் குமார் மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கு தொடர்ந்தது என்றும் தான் சிவகங்கை செல்லும் போது அஜித்தின் தாய் மற்றும் தம்பியை சந்தித்து ஆறுதல் கூறுவேன் என்றும் தெரிவித்தார். வீடு வீடாக சென்று கதவை தட்டும் பரிதாப நிலைக்கு திமுக சென்று விட்டதாகவும் காங்கிரஸ் உட்பட திமுக கூட்டணி கட்சிகள் மற்ற கட்சிகளை விமர்சித்து தான் வருகின்றன அது இயல்பு என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!