×
 

15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

போராட்டக்காரர்கள் 4 மணிக்குள் வெளியேறி விட்டதையடுத்து 5 நாள் மறியல் முடிவிற்கு வந்தது.

மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சாலை மறியல் போராட்டம் கோர்ட் உத்தரவுப்படி விலக்கி கொள்ளப்பட்டது. மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் இரண்டு கூலி தொழிலாளர்களை டூ வீலரில் வந்த இருவர் வாளால் விரட்டி விரட்டி வெட்டினர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் கிருஷ்னராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) குணா ஆகிய இருவரை கைது செய்தனர்.

போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று ஆகாஷ் கால் முறிந்ததாகவும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு திணறல் காரணமாக 8 ம் தேதி அதிகாலை உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. போலீசார் அடித்து கொன்றதாக கூறி 8ம் தேதி காலை 10 மணியில் இருந்து மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில மானாமதுரை பை பாஸ் ரோட்டில் தாழ்த்தப்பட்ட இன அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் 5 நாட்களாக நடந்தது.

போக்குவரத்து  கடுமையாக பாதிக்கப்பட்டதால் மானாமதுரை சுற்று வட்டார கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மானாமதுரை போலீசாரின் காவலில் மரணமடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்ட நிலையில், உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆகாஷின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்- வகையில் செய்யப்பட்டுள்ள மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மறியலை கைவிட வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!


இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது அரசு தரப்பில், 103BNS மற்றும் எஸ்சி எஸ்டி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இருந்தும் போராட்டக்காரர்கள் யாரும் போராட்ட இடத்தை விட்டு அகலவில்லை இதனால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மானாமதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் போராட்டத்தை 15 நிமிடங்களில் கைவிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார். இதனையடுத்து சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் தலைமையில் 100 போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் 4 மணிக்குள் வெளியேறி விட்டதையடுத்து 5 நாள் மறியல் முடிவிற்கு வந்தது.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share