யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!
மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைதான விசாரணை கைதி ஆகாஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் தனிப்படை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் இரண்டு கூலி தொழிலாளர்களை பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் (26) மற்றும் குணா ஆகியோர் ஓட ஓட விரட்டி வாளால் வெட்டினர். இது தொடர்பாக திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற ஆகாஷ் டெலிசன் பாலத்திலிருந்து விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 7ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த போது நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஆகாஷ் டெலிசனை போலீசார் அடித்தே கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை – ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் 8 ம் தேதி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆகாச சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 4வது நாளாக போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கீதா ஆகியோர் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக இருக்கக்கூடிய வெங்கடேச பெருமாளை இன்று வந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாவுல் கம்பீத் என்பவர் எஸ்.பி.எஸ் தனிப்படை ஆய்வாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!