ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!
ஆகாஷின் பெற்றோர் உடனடியாக ஊடகங்கள் வாயிலாக மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்ல மதுரை கிளை உத்தரவு
கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி மற்றும் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை- இறந்து போன ஆகாஷ் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல்.
சிவகங்கை, மானாமதுரை போலீசாரின் காவலில் மரணமடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்ட நிலையில், உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆகாஷின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்- வகையில் செய்யப்பட்டுள்ள மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மறியலை கைவிட வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை மறியல் கைவிடப்படாததால், அவ்வழியே பயணிப்போர், மாணவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதால், உடனடியாக கலைந்து செல்ல அறிவுறுத்த வேண்டுமென அரசுத் தரப்பில் நீதிபதி விக்டோரியாக கௌரி முன்பாக முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!
ஆகாஷ் தந்தை தரப்பில் வழக்கறிஞர் ஹென்றி ஆஜராகி, "நேற்றைய தினம் இரவு உடற்கூராய்வு முடிந்த நிலையில், காலை சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படும் என நீதித்துறை நடுவர் தெரிவித்திருந்தார். பெற்றோர் காத்திருக்கிறார்கள்.& இன்னமும் சான்றிதழ் மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதுக்கு அரசு தரப்பில், "30 நிமிடங்களுக்குள்ளாக அவை வழங்கப்பட்டு விடும். தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "இன்னும் பொதுமக்களை சிரமப்படுத்தும் வகையில் ஏன் மறியல் போராட்டத்தை நடத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு வழக்கறிஞர் ஹென்றி தரப்பில், "கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி மற்றும் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "விரைவாக உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவு வழங்கப்படும். இதனை வைத்து அரசியல் செய்வதற்கு நேரமில்லை. ஒருவேளை அது காவல் மரணமாக இருந்தால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டு ஆகாஷின் பெற்றோர் உடனடியாக ஊடகங்கள் வாயிலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்த உத்தரவிட்டு வழக்கை நாளை 2.15 மணிக்கு ஒத்துவித்தனர்
இதையும் படிங்க: தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!