×
 

BREAKING!! சொன்னபடி துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! சீறிப்பாய்ந்தது காளைகள்! காளையர்கள் பாய்ச்சல்!!

போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும் பிரைஸ், வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17, 2026) காலை 7 மணிக்கே வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் வருகையால் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்பட்ட எதிர்ப்பைத் தவிர்க்கும் வகையில், இன்றைய போட்டி சரியான நேரத்தில் தொடங்கப்பட்டது.

அலங்காநல்லூர் கோயில் காளைகள் முதலில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் 1100-க்கும் மேற்பட்ட காளைகளும், 550-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் மூலம் பதிவு செய்து பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர்.

காலை 10 மணிக்கு மேல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை நேரில் பார்வையிட உள்ளார். அப்போது சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரங்கள் வழங்கப்படும். மேலும், சிறந்த காளைக்கு டிராக்டர், முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு கார், இரண்டாம் இடத்துக்கு பைக், மூன்றாம் இடத்துக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: BREAKING! துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்ஸிங்! அதிருப்தி!

போட்டி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்த காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் குழு இதற்கு பொறுப்பாக உள்ளனர். ஆள்மாறாட்டத்தைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

போலி டோக்கன்களைப் பயன்படுத்தி யாரேனும் பங்கேற்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 3000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் 60 கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஸ்கோர் போர்டு மூலம் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுகின்றன.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக தனி பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் உச்சமாக விளங்கும் இந்த ஜல்லிக்கட்டு, இன்று முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது!

இதையும் படிங்க: உதய்ணா!! ரொம்ப தப்புண்ணா!! எப்போ சார் துவக்கி வைப்பீங்க! பாலமேடு மக்கள் ஆதங்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share