#Breaking: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவம்... பனை தொழிலாளி மீது சரமாரியாக பாய்ந்த குண்டுகள்... 3 போலீசார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு...!
மணிகண்டன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மூன்று போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் விவசாயி மணிகண்டன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள் இறக்கியதாக கூறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மணிகண்டனை காலில் சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டனின் உறவினரான 17 வயது சிறுமி பிரதீபா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக கொலை முயற்சி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் விவசாய மற்றும் பனைத் தொழிலாளி மணிகண்டன்(32) என்பவர் அந்த பகுதியில் கள் விற்பனை செய்து வந்ததாக கூறி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜன் அவரை விசாரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனின் காலில் 10 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் நான்கு குண்டுகள் காலில் பாய்ந்துள்ளது. இசக்கி ராஜனும் காயமடைந்தார். இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இந்த முறை இரட்டை இலை சின்னம் இருக்காது... அவிநாசியில் அதிமுக வாக்காளர்களிடம் சிக்கித் தவித்த எல்.முருகன்...!
ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு அரசு உதவி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மருதம்புத்தூர் கிராம மக்கள் ஆலங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் சாலை மறியல் செய்யவும் முயன்றனர். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றதன் பேரில் அவர்கள் வெகு நேரத்திற்கு பின்னர் கலைந்து சென்றனர். இதனையடுத்து தற்போது போலீசார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ஈரான் எடுத்த திடீர் முடிவு... ட்ரம்ப் அறிவித்த மறுகணமே அதிரடி மாற்றம்... உலகமே பெரும் எதிர்பார்ப்பு...!