×
 

அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மண்டலத் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறுகள் குறித்து வெளிப்படையாகப் பேசி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

கூட்டத்தில் பேசிய வைகோ, கடந்த காலங்களில் தான் எடுத்த சில அரசியல் முடிவுகள் கட்சியின் வீழ்ச்சிக்கு எவ்விதம் காரணமாக அமைந்தன என்பதைப் பட்டியலிட்டார். நான் கடந்த காலத்தில் சில பிழைகளைச் செய்திருக்கிறேன், அதை இங்கே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையைச் சுக்குநூறாக்கியது அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததுதான். 19 மாதங்கள் என்னைச் சிறையில் அடைத்த அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது, நான் எடுத்த மிகத் தவறான மற்றும் மன்னிக்க முடியாத முடிவு. மேலும், இமயம் போல் உயர்ந்திருக்க வேண்டிய மதிமுக, அதிமுக கூட்டணியால் பாதாளத்திற்குச் சென்றது. அரங்கேற்றம் திரைப்பட நாயகி போல என் நிலைமை ஆகிவிட்டது என தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். கட்சியின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், 1994-ல் நடிகர் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் எனக்கு வந்தது. ஆற்று வெள்ளம் வடியது போல, தோல்விக்குப் பிறகு மதிமுக வடிந்து போய்விட்டது. ஆனால், அது தவறில்லை; மீண்டும் நாம் எழுவோம் என தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய வைகோ, மதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். திமுகவுடன் தோழமை கொள்வது என முடிவெடுத்த பிறகு, நாங்கள் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. மற்ற கட்சிகள் நிபந்தனை விதிப்பது அவர்களது உரிமை. தமிழகத்தில் மதிமுகவைப் போல கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கிற கட்சி வேறெதுவும் இல்லை. திமுக ஆட்சிக்கு எவ்வித குந்தகமும் விளைவிக்காமல் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இதையும் படிங்க: மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தை என வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரு அக்னிப்பரீட்சை போன்றது; அதை நாம் வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.


 

இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்; ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முழக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share