×
 

திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்; ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முழக்கம்!

தேர்தல் பணிகளில் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது!” - மதுரையில் வைகோ அதிரடிப் பேட்டி!

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் திமுக கூட்டணியின் பலம் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்றக் கூட்டணிகளை விட திமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் பணிகளில் மிகவும் முன்னிலையில் இருப்பதாக வைகோ தெரிவித்தார். மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்றுவதில் திமுக கூட்டணி எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது; எங்களது கூட்டணிப் பணிகள் ஏற்கனவே முழு வீச்சில் தொடங்கிவிட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் வெகுவாகப் புகழ்ந்து பேசிய அவர், தமிழகத்தின் பொற்காலமாகத் திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.

இதையும் படிங்க: மருத்துவ மாணவன் கிஷோர் மீட்பு: என் பொது வாழ்வின் ஆகச்சிறந்த சாதனை! - திருச்சியில் துரை வைகோ எம்.பி. நெகிழ்ச்சி!

 திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயமாகத் தொடரும்; சமூக நீதியையும் மாநில உரிமைகளையும் காக்க இந்த ஆட்சியின் தொடர்ச்சி மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். திமுக உடனானத் தங்களது கூட்டணி மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த வைகோ, மதவாத மற்றும் சனாதன சக்திகளைத் தமிழகத்திலிருந்து வேரறுக்கத் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார். முன்னதாக, போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தித் திருச்சியில் தொடங்கி மதுரையில் நிறைவடைந்த தனது 'சமத்துவ நடைபயணத்தின்' முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: வைகோவின் 'சமத்துவ நடைபயணம்' இன்று தொடக்கம்!  தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share