×
 

தமிழகத்தையே அதிர வைத்த ஆம்பூர் கலவர வழக்கு... இன்று வெளியாகிறது பரபரப்பு தீர்ப்பு...!

தமிழகத்தையே உலுக்கிய இந்த பரபரப்பான கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஆம்பூரில் 2015 ஆம் ஆண்டு ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்த தமிழ் பாஷா என்பவர் டிரைவர் கம்பெனியில் வேலை செய்து வந்தால் அப்போது பள்ளிகொண்டாவை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரிஷிதா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்த சமீல் பாட்ஷாவை பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.அப்போது அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனை அறிந்த ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு திருப்பத்தூர் வேலூர் சாலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

அப்போது அவர்களை கலைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அப்போது போராட்ட கும்பல் போலீசார்  தாக்கியதால் தான் சமில் இறந்தார் எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தினர் ஆம்பூரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகார்களுக்கு கலவரம் ஏற்பட்டு இதில் பெண் காவலர்கள் உட்பட 91 பேர் தாக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: இதுதாங்க நம்ப தமிழ்நாடு... விநாயகர் ஊர்வலத்தில் கூட்டம், கூட்டமாக பங்கேற்ற இஸ்லாமியர்கள்...!

இதில் படுகாயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 11 அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டது. 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. 4 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தினர். இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 191 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கலவரக்காரர்கள் கற்களை வீசுதல், வாகனங்களை எரித்தல், கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன.

இது தொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழகத்தையே உலுக்கிய இந்த பரபரப்பான கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் திருப்பத்தூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூள் கிளப்பிய திமுக அமைச்சரின் வாரிசு... கொண்டாட்டத்தில் உடன் பிறப்புகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share