விஜய் பிறந்தநாளில் நடந்த அவலம்... தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்களை வைத்து தவெகவினர் செய்த காரியம்...!
ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்களை வைத்து தேசிய நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் கட்சி கொடியை கட்ட வைத்த தவெகவினர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்களை கட்சி கொடியை கட்ட வைத்த தவெகவினர் மற்றும் கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி கொடியை கட்டுவதற்காக அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேலிகளில் ஆபத்தான முறையில் கட்சி கொடிகளை கட்ட வைத்துள்ளனர்.
ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேலிகளில் தவெக கட்சி கொடியை கட்டும் பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் புத்தகம் எடுத்து செல்லும் மாணவர்களின் கையில் கட்சி கொடிகளை கட்ட வைத்த தவெக நிர்வாகிகள் மற்றும் கண்டு கொள்ளாத அரசு நிதி உதவி பெறும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் மீது துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்வி கண் திறந்த ஐயா கர்மவீரர் காமராஜர் அவர்களை கொள்கை தலைவராக வைத்துக் கொண்டு இப்படி பள்ளி மாணவர்களின் வாழ்க்கை நாசமாக்கி கொண்டிருக்கிறது இந்த த.வே.க அரசு....
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) June 23, 2026
இதுதான்டா தரமான ஆட்சி...🤷...🤬...🤦... pic.twitter.com/ANOKG3WSPx
இதையும் படிங்க: "முந்தைய ஆட்சியின் ஓட்டை"... எங்களுக்கு பணத்தை சுருட்ட தெரியாது தான்..! CM விஜய் ON FIRE..!!