×
 

"முந்தைய ஆட்சியின் ஓட்டை"... எங்களுக்கு பணத்தை சுருட்ட தெரியாது தான்..! CM விஜய் ON FIRE..!!

சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் பதிலுரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வு என்று கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரூர் உயிரிழப்பு கொடூர சம்பவம் எப்போதும் நெஞ்சத்தை விட்டு அகலாது என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார். இன்னும் கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்கள் என்றும் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜல்ஜீவன் நிதியை கேட்டு பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு ஊருக்கு பதிலாக தான் நமது ஆட்சி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் விஜய் தங்கள் ஆட்சியில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். 2026 தேர்தலில் யாராலும் உடைக்க முடியாது என்று சொன்ன சாதி மதத்தை உடைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்பதை செயலில் செய்ததாக நம்மை கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் போடப்பட்ட ஓட்டைகளை அடைத்து கொண்டே மக்களுக்காக நலப் பணியும் செய்கிறோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ஊழல் இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம் என்று தெரிவித்தார். எங்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று கூறுகிறார்கள் என்றும் மக்கள் பணியை செய்ய தெரிந்த அளவுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சியா..? உதயநிதிக்கு பேரவையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!

டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவர்களுக்கு அதன் ரேட் உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது தான் என்று கூறினார். பதவி உயர்வுக்கு பணம் பறிக்க தெரியாது தான் தெரிவித்துள்ளார். பணியிடங்களை உருவாக்க தெரியும் தவிர எங்கள் எம்எல்ஏக்களுக்கு பணம் வாங்க தெரியாது தான். கோவில்களில் நடக்கும் சீர்கேடுகளை தடுக்க தெரியுமே தவிர கோவில் படத்தை கொள்ளை அடிக்கத் தெரியாது என்றும் தங்கத்தை உருக்கி தாரைவாக்க தெரியாது தான் என்று தெரிவித்தார். தங்கள் உறுப்பினர்களுக்கு கனிம வளத்தை கொள்ளை அடிக்க தெரியாது என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சட்டசபை 2026: பெரும் எதிர்பார்ப்புடன் 3 ஆம் நாள் அமர்வு தொடக்கம்..!! முதல்வர் விஜய் என்ன பேசுவார்...?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share