×
 

வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பியதற்காக ஏராளமான போராட்ட வீரர்கள் சிறை சென்றதை அவர் நினைவுபடுத்தினார்.

அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடுவது தொடர்பான நெறிமுறையை காங்கிரஸ் கடைப்பிடிக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை காங்கிரஸ் அவமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் வந்துள்ள அமித் ஷா, செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது வந்தே மாதரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். 1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் வந்தே மாதரம் பாடலை இரு பகுதிகளாக பிரித்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த முடிவே பின்னர் இந்தியப் பிரிவினைக்கு அடித்தளமிட்டதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

காங்கிரஸ் செயற்குழு சமீபத்தில் எடுத்துள்ள முடிவு, 1937ஆம் ஆண்டு அக்கட்சி எடுத்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமித் ஷா கூறினார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டி, முழுப் பாடலையும் பாடுவதன் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார். அரசு நிகழ்ச்சிகளில் முழுமையான வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையை காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயல் என்றும் அமித் ஷா விமர்சித்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பியதற்காக ஏராளமான போராட்ட வீரர்கள் சிறை சென்றதை அவர் நினைவுபடுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் அதே நேரத்தில், காங்கிரஸ் தனது பழைய கட்சித் தீர்மானத்தை பின்பற்றி வருவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ‘திருப்திப்படுத்தும் அரசியலை’ முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவகாரம் ஏற்கனவே அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமித் ஷாவின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்திலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நீங்க அத கவனீச்சீங்களா?! அமித்ஷாவுக்கு முதல்வர் விஜய் கொடுத்த கிஃப்ட்! மூடிய பையில் கொடுத்த பரிசு என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share