காரைக்காலுக்கு புறப்பட்ட அமித் ஷா..! தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்காலுக்கு புறப்பட்டு சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சிக்கு வந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் திட்டங்கள், கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடு போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி(நேற்று) இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவர் வந்தடைந்தார்.
சற்று தாமதமாக இரவு 11 மணியளவில் வந்த அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து காரில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். அப்போது, அங்கு பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநில மற்றும் மத்திய நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் வியூகங்கள், கூட்டணி உறுதிப்படுத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திருச்சி வருகையை முன்னிட்டு நகரில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகளும் இறுக்கமாக இருந்தன. இன்று அவர், திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் நோக்கி புறப்பட்டார்.
இதையும் படிங்க: இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!
காரைக்கால் நகராட்சி சந்தை திடலில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ரங்க சாமியுடன் அமித் ஷா ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12,000 பேர் வரை பங்கேற்க இருப்பதால் 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!