×
 

புதுவையில் பாஜக பிரச்சார பயணம் தொடக்கம்... தாமரை மலருக்கு வண்ணம் தீட்டிய அமித்ஷா..!

புதுச்சேரியில் பாஜகவின் பிரச்சார பயணத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

தமிழக தேர்தல் களம் என்பது பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக தமிழக தேர்தலை மிகவும் உன்னிப்பாக கையாண்டு வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வருகை தருவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சிக்கு வந்தது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் திட்டங்கள், கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடு போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவர் வந்தடைந்தார்.

சற்று தாமதமாக இரவு 11 மணியளவில் வந்த அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து காரில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். அப்போது, அங்கு பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: காரைக்காலுக்கு புறப்பட்ட அமித் ஷா..! தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..!

இன்று அவர், திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் நோக்கி புறப்பட்டார். புதுச்சேரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பயணத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுவற்றில் வரையப்பட்டிருந்த தாமரை மலருக்கு அமித்ஷா வண்ணம் தீட்டினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் தொகுதி பங்கேடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share