×
 

அப்படியா சொன்னேன்? நாராயண சாமியா... ரங்கசாமியா? கன்பியூஸ் ஆன மொழிபெயர்ப்பாளர்.. டென்ஷனான அமித்ஷா..!

காரைக்காலில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார்.

காரைக்காலில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திருநள்ளாறு சனீஸ்வரன் மற்றும் பத்ரகாளியம்மன் வணங்கி உரையை தொடங்குகிறேன் என்று தெரிவித்தார். இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றும் பறவை மகரிஷி அரவிந்தர் கனவு கண்ட இடம் புதுச்சேரி என்று தெரிவித்தார். உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமா என்று தொண்டர்களின் நோக்கி அமைத் ஷா கேள்வி எழுப்பினார். உடனே தொண்டர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிதான் புதுச்சேரியில் வரவேண்டும் என்று கைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்பினார்கள். புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக ஆட்டுவித்தது முந்தைய காங்கிரஸ் அரசு என்று குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மையை எண்டியை கூட்டணி உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த 40 வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்தியா கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்து எறிவதற்காக வந்திருப்பதாகவும், பிரதமர் மோடி வந்த பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகளை வீடு புகுந்து தாக்கியதாகவும் தெரிவித்தார். அமித் ஷா தனது உரையின்போது முந்தைய ஆட்சியின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி குறித்து பேசினார்.

இதையும் படிங்க: "சிங்கம் ஒன்று புறப்பட்டதே"... ரஜினி பாடலுடன் அமித்ஷா மாஸ் என்ட்ரி...! தொண்டர்கள் செம்ம குஷி..!

நாராயணசாமி ஆட்சி முறையாக நடை பெறவில்லை என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். அதற்கு மொழிபெயர்ப்பாளர் ரங்கசாமியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று தவறாக மொழி பெயர்த்தார். பெயர் மற்றும் அர்த்தம் மாறியதை சுதாரித்துக் கொண்ட அமித் ஷா, தான் அப்படி கூறவில்லை என்று மொழிபெயர்ப்பாளரை கண்டித்தார். இதன் பிறகு நாராயணசாமி ஆட்சி முறையாக நடைபெறவில்லை என்ற கருத்தை மொழிபெயர்ப்பாளர் திருத்தி கூறினார். இதனால் பிரச்சார கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: புதுவையில் பாஜக பிரச்சார பயணம் தொடக்கம்... தாமரை மலருக்கு வண்ணம் தீட்டிய அமித்ஷா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share