×
 

NDA கூட்டணி ஒரு துரோக கொத்தடிமை கூட்டணி! திமுக கடும் குற்றச்சாட்டு..!

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது துரோக கொத்தடிமை கூட்டணி என திமுக விமர்சித்து உள்ளது.

அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி முதன்முதலாக 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உருவானது. அப்போது, அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட 24 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி, அந்தக் காலகட்டத்தில் பாஜகவின் தேசிய அளவிலான வளர்ச்சிக்கு முக்கியமான திருப்பமாக அமைந்தது. இருப்பினும், இந்தக் கூட்டணி நீண்டகாலம் நீடிக்கவில்லை .

ஏனெனில் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக, பாஜகவுக்கு அளித்த ஆதரவை 1999இல் திரும்பப் பெற்றது, இதனால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.பின்னர், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் மீண்டும் இந்தக் கூட்டணி உருவானது. 2019இல், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனால், இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் திமுக கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தோல்வியடைந்தது, இதனால் இரு கட்சிகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலை இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ள பாஜக அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணி துரோக கொத்தடிமை கூட்டணி என்ற திமுக விமர்சித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல என்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி, முன்னேற்றம் அடையச் செய்யும் கூட்டணி என்று திருநெல்வேலியில் பொய் மூட்டையை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவிழ்த்து விட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம் என்றும் அதனைக் கண்டும் காணாமல் கொத்தடிமையாகக் கிடப்பது அ.தி.மு.க.வின் பழக்கம் எனவும் கூறி உள்ளது.

இதையும் படிங்க: வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share