×
 

#BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.

2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார்.

இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

தமிழகத்தில் பாஜக தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த முயலும் நிலையில், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை முக்கிய கூட்டணி பங்காளியாக கருதியது. இதனால், ஓபிஎஸ்-இன் அணியை புறக்கணிப்பது, பாஜகவின் பரந்த அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக இபிஎஸ்-உடன் நெருக்கமாக செயல்படுவதாகவும், ஓபிஎஸ்-ஐ தவிர்ப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலக இருப்பதாக செய்தி வெளியாகின. பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வத்தை மதிக்கவில்லை என்றும், அவர் அந்த கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணிகள் விருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்பப்பா... மக்கள் மேல ரொம்ப தான் அக்கறை..! திமுகவை பந்தாடிய ஓபிஎஸ்..!

ஓ பன்னீர்செல்வம் விரைவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி வழக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக தெரிவித்தார். எந்த கட்சியினாலும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை., எதிர்காலத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share