×
 

களமாடும் TTV... நாளை வெளியாகிறது அமமுக வேட்பாளர்கள் பட்டியல்... பெரும் எதிர்ப்பார்ப்பு..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 169 தொகுதிகளில் தனது சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது.

இந்தப் பங்கீட்டில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 1 தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி என சிறிய கட்சிகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பெரியகுளம் (தனி), மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நான்குநேரி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி (தனி), மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பது குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகின்றன.

இதையும் படிங்க: திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!

அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 11 தொகுதிகளில் போட்டியிலும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share