திமுகவில் இணைந்த அமமுக முக்கிய நிர்வாகி..! அதிரடி நீக்கத்தால் அரசியலில் தலைகீழ் திருப்பம்..!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றை வகித்தவர்களில் S.V.S.P. மாணிக்கராஜா ஒருவர். கடம்பூர் இளைய ஜமீன்தார் என்று அழைக்கப்படும் அவர், கயத்தாறு ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தென் மண்டலப் பகுதிகளில் கட்சியின் அமைப்புப் பணிகளை முன்னின்று செய்தவர் இவர். அமமுக தொண்டர்களிடையே நல்ல செல்வாக்கு கொண்டிருந்ததோடு, புதிய உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட அளவிலான கூட்டங்கள் என பல்வேறு கட்சி நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பல்வேறு கட்சி அறிவிப்புகளிலும் அவரது பெயர் துணைப் பொதுச் செயலாளராக இடம்பெற்றிருந்தது.
இதையும் படிங்க: ஒற்றுமை இல்லாத அதிமுக கூட்டணி ஒருபோதும் வெல்லாது! கனிமொழி எம்.பி. அதிரடி!
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் அவர் இடம்பிடித்திருந்தார். கயத்தாறு பகுதியில் கழகத்தின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு கணிசமாக இருந்தது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த மாணிக்க ராஜா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர அறிவிப்பை வெளியிட்டார்.
அமமுக வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கம் செய்யப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாணிக்கராஜா என்ற திமுகவில் இணைந்துள்ளார். தென் மாவட்டங்களை சேர்ந்த சில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் மாணிக்கராஜா என்ற திமுகவில் இணை இருப்பதாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிலையில் மாணிக்கராஜா, தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி, குமரி மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் ரத்தினராஜ், குமரி மத்திய மாவட்ட செயலாளர் டெல்லஸ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆளுநர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம்; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக முடிவு!