×
 

நிற்காத மரண ஓலம்... அமோனியா வாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு...!

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவால் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனயா வாயு கசிந்து அடுத்தடுத்து தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். பெண் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இந்த ஆலையில், இறால் பதப்படுத்தும் தொழில் பிரதானமாக உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பனிக்கட்டி துகள் தயாரிக்கும் இயந்திரத்துக்கு செல்லும் குழாயில் எதிர்பாராத ஏற்பட்ட விபத்தின் காரணமாக வாயு கசிவு ஏற்பட்டது.  இந்த வாயுக் கசிவால் 69 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேரும் சென்னை   ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 13 பேரும் என மொத்தம் 69 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நலமடைந்து சிகிச்சை முடிந்து திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி இதுவரை 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 

அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3  பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஒருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 2 பேரும்ஸ்டான் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த  மூன்று பேர்  உட்பட நேற்று வரை 10 பேர் உயிரிழந்தனர். 

அதன்படி  வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங்கா-19  புல்மோனி ஜுவாங்கா -23 ஷிபானி-22 , சம்பாபதி ஜுவாங்கா -23  ஆகியோரது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டு ஒடிசா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன் (59), ஜோசப் ஜெகன் (48), மேலாளர் டேனியல் (68) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே திமுக தலையில் இறங்கியது பேரிடி... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share