திருவள்ளூரை உலுக்கிய கோரச் சம்பவம்...! அம்மோனியா வாயுக்கசிவு வழக்கு... 3 பேருக்கு நிபந்தனை ஜாமின்..!!
அம்மோனியா வாயு கசிவு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனமான புனித பீட்டர் மற்றும் பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் 2026 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த அம்மோனியா வாயு கசிவு விபத்து தமிழகத்தின் சமீபத்திய தொழில்துறை விபத்துகளில் மிகவும் கொடூரமான ஒன்றாக அமைந்தது. அன்றைய தினம் ரொட்டின் செயல்பாடுகள் இல்லாததால் தொழிலாளர்கள் தங்கள் தங்கும் அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
தொழிற்சாலையின் குளிரூட்டும் அமைப்பில் உள்ள அம்மோனியா குழாய் திடீரென உடைந்து வாயு வெளியேறியது. அழுத்தம் அதிகரித்து வெப்பநிலை உயர்ந்ததால் குழாய் வெடித்ததாகவும், முதல் தளத்தில் உள்ள தொழிலாளர் தங்கும் பகுதிக்கு வாயு வேகமாக பரவியதாகவும் தெரியவந்தது.நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியா வாயு கண்களையும் தொண்டையையும் எரிச்சலூட்டியது. மூச்சுத் திணறல், இருமல், மார்பு வலி, மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் தொழிலாளர்கள் திகைத்து ஓட முயன்றனர். அருகில் இருந்தவர்கள் கூச்சலைக் கேட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட குழுக்கள் விரைந்து வந்து வாயுவை நடுநிலையாக்கும் பணியில் ஈடுபட்டன. தொழிற்சாலை வளாகத்திற்குள் தங்கியிருந்த தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆண்களின் தங்கும் இடம் சற்று தொலைவில் இருந்ததால் பெண்களே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாயினர்.மொத்தம் 83 தொழிலாளர்கள் வாயுவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: குதிரை பேர வழக்கு... நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..! நிபந்தனைகள் விதிப்பு..!!
இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு வழக்கில் கைதான ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் அமோனியா வாயுக் கசிவில் பலியானூர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனவும் ஆளை உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை நிர்ணயித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!