×
 

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் இதற்காக தான்.. விளக்கம் அளித்த அமுதா ஐஏஎஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் மக்களின் குறைகளை விரைவாகவும், எளிதாகவும் தீர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு மக்கள் நலத் திட்டமாகும். இத்திட்டம் ஜூலை 15ம் தேதியான நாளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அரசு திட்டங்களையும், சேவைகளையும் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், மக்களின் மனுக்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை விளக்கியிருக்கிறார் அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ். இதுகுறித்து பேசிய அவர், அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரும்புகிறார் என்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அவர் சிதம்பரத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்கிட்ட காசு இல்லை! வெள்ள நிவாரணம் கேட்ட மக்கள்.. கங்கனா பதிலால் வெடித்த சர்ச்சை!!

மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாகவும், இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளதாகவும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க, உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுபவர் எனவும் தெரிவித்தார்.

மக்கள் அதிகமாக கூடும், வசிக்கும் இடங்களில் முகாம்கள் நடத்த இருப்பதாக தெரிவித்த அமுதா, மக்களுக்கு நாம் முகாம் நடத்துவது தெரியப்படுத்த முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்டம் முகாம் நடத்த உள்ளதாகவும், இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமுதா, முன்பு 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. ஆனால் இப்போது 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் அமைக்கப்பட உள்ளது என்றும் முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது என்றும் கூறினார்.

மக்களின் குறைகளை கேட்டு அறிய 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளைப் பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் திட்டங்கள் செயல்பாடுகள் மக்களிடையே விரைவாக செல்ல வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நினைக்கிறார். மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் முகவரி துறை மூலம் 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 30ஆம் தேதி வரை 1 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2344 ஊரக முகாம்கள் மூலம் 95 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமுதா தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலையிலே பரபரப்பான கலெக்டர் ஆபீஸ்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share