காலையிலே பரபரப்பான கலெக்டர் ஆபீஸ்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி...!
தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி, ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆண்டி (வயது 54) இவரது மனைவி வெள்ளையம்மாள், ஆண்டியின் தங்கை சடையம்மாள், ஆண்டியின் மகள் குப்புத்தாய் ஆகியோர் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான பட்டா அவர்களிடம் உள்ளது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம், பிச்சை, ஆறுமுகம், அன்புச்செல்வன், அடைக்கலமராஜ் என 4 பேர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இடத்திற்குள் நுழைய விடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண்டி சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஆண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று 14.07.25 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை நான்கு பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதையும் படிங்க: மட்டம் தட்டிய ரவுடி... MURDER செய்த சகாக்கள்... தலையை சிதைத்து, கழுத்தை அறுத்த கொடூரம்!
இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்றவர்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் சரவணினிடம் வழங்கினர்
இதனை தொடர்ந்து 4 பேரையும் போலிசார் விசாரணைக்காக திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட பெண்... திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...!