×
 

நெல்லையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்..! முன்னேற்பாடுகள் மும்முரம்..! பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி..!!

விஜய் நாளை நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் விழா மேடை அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுப்பயண விபரம் மாலையில் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து நாளை நெல்லையிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

அதற்காக நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் விழா மேடை அமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிங்க: அடிப்படை அறிவு கூட திமுக வழக்கறிஞர்களுக்கு இல்லை..! ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு..!

அப்போது, திருநெல்வேலிக்கு நாளை விஜய் வர இருக்கிறார் என்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மாலையில் ட்விட்டர் பக்கத்தில் விஜய் வந்து செல்லும் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என்றும் மக்களை சந்திக்க தான் விஜய் வருகிறார்., தூத்துக்குடிக்கும் செல்கிறார். அங்கேயும் மக்களை சந்திக்கிறார் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share