×
 

கைவிடமாட்டோம்... ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்... சீராய்வு மனு குறித்து முதல்வருடன் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனை..!

ஆசிரியர் தகுதி தேர்வு எதிர்த்து திமுக சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளது தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவை இல்லை என்று கூறியது. சிறுபான்மை நிறுவனத்தில் டெட் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறுபான்மை நிறுவனங்களில் டெட் கட்டாயப்படுத்தினால் உரிமை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. ஆசிரியர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்னது தரம் இல்லையா? கேள்வி கேளுங்க., அப்ப புரியும்... ஆளுநருக்கு அன்பில் மகேஷ் சவால்...!

ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: "பள்ளிகளில் மழைநீர் தேங்காது... மீறி தேங்கினால்... " - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share