×
 

தமிழினம் இரும்பு பயன்படுத்திய வரலாறு! மூடி மறைக்க பாஜக முயல்வதாக அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

தமிழினம் இரும்பு பயன்படுத்திய வரலாற்றை மூடி மறைக்கும் வேலையை பாஜக செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கட்டினார்., அது முழுமை அடைந்த ஒரு நிகழ்வை ஒரு திருப்தியை தருகின்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது என தெரிவித்தார். இந்த கூடம் என்பது ஒரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்னுடைய கட்டுப்பாட்டில் வரக்கூடிய ஒரு இடம் என்று கூறினார்.

நாங்களும் அறிவு சார்ந்த தான் தமிழை உயர்த்திப் பிடிக்க பார்க்கின்றோம், தொன்மையை விளக்க பார்க்கின்றோம்., இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் ஒரு சில பேர் 2000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழி என சுருக்க பார்ப்பார்கள் என்றார். ஆனால் சமஸ்கிருதத்தை மற்ற மொழியும் பல்லாயிரம் ஆண்டு என்று சொல்கிறார்கள்., ஆனால் அவர்களுக்கு கணக்கே வராது நம்மை மட்டும் 2000 ஆண்டுகள் என்று சுருக்கிவிடுவார்கள். நாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்கிறோம்., பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிறோம் இதெல்லாம் தமிழ் நமக்கு கற்றுக் கொடுத்தது. நமக்கு சொல்லித் தந்தது என தெரிவித்தார்.

நம் தமிழினமே இரும்பை பயன்படுத்தியிருக்கிறது, ஆனால் அதை மூடி மறைக்கின்ற வேலையை செய்கிறார்கள். நாம் என்ன தவறு செய்தோம் என கேள்வி எழுப்பினார். எல்லாரும் ஒற்றுமையாக வாங்க., எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனறு சொல்வது தவறா, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லியது தவறா என்றார்.

இதையும் படிங்க: இதே வேலைதானா? சும்மா நோண்டாதீங்க! ஆளுநர் ரவிக்கு அன்பில் மகேஷ் வார்னிங்..!

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் மொழியை தொடர்ந்து உயர்த்தி பிடித்து வருகிறார் என்றும் வள்ளுவருக்கு மிகப்பெரிய சிலையை கன்னியாகுமரியில் வைத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share