வெவரம் தெரிஞ்சு பேசுப்பா அன்புமணி! லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த துரைமுருகன்...
பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியது உண்டா என அன்புமணி கேட்டதற்கு துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
பாலாறு, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திரப் பிரதேசம் வழியாகத் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைக் கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஒரு முக்கியமான ஆறாகும்.
இந்த ஆறு, ஒரு காலத்தில் வளமான விவசாயப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்தது. ஆனால், கடந்த சில தசாப்தங்களாக, முறையற்ற நீர் மேலாண்மை, மழை பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களின் தடுப்பணைகள் காரணமாக பாலாறு வறண்டு, பல பகுதிகளில் பாலைவனமாக மாறிவருகிறது.
இதனால், இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றை உயிர்ப்பிக்கும் முயற்சியாக, தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் சில தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மக்கள் எதிர்த்தும் எப்படி முடிவெடுக்க முடியுது? தனியார் பேருந்துகள் கட்டண உயர்வுக்கு அன்புமணி எதிர்ப்பு..!
இவை, ஆற்றில் நீரைத் தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், விவசாயத்திற்கு நீர் வழங்குவதற்கும் உதவுகின்றன. இந்த முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனிடையே, பாலாற்றில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரத்துடன் அன்புமணிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடலில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என அன்புமணி கேள்வி கேட்டிருந்ததாக கூறினார்.
இனி மேலாவது யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளி விவரத்துடன் அன்புமணி பேசுவது நல்லது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையும் படிங்க: இனியும் மாணவர்கள் மரணம் தொடரக்கூடாது... தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்