×
 

பெண்களே திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இருக்கா..? விளாசிய அன்புமணி..!!

ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என அன்புமணி விமர்சனம் செய்தார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

90 சதவீத தபால் வாக்குகள் அதிமுகவுக்கு தான் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவமனையில் இல்லை என்றும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் அமலாகி இருந்தார் இருந்தால் 59 எம்பிக்கள் கிடைத்து இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தாய்மார்களே, பெண்களே, பெற்றோர்களை திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று அன்புமணி கேட்டுக்கொண்டார்.

ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போடக்கூடாது என தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்பதாக தெரிவித்தார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இதுபோல் கொடுமை நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டுள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக 5 படுகொலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் 208 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். 4800 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார். இரண்டு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என கூறி நம்பிக்கை தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் எரிப்பதாகவும் இது தேச துரோகம் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share