என்ன திமுக ஆதரவா? பொன்ராஜை அரெஸ்ட் பண்ணுங்க..! போர்க்கொடி தூக்கிய அன்புமணி..!!
பொன்ராஜை கைது செய்யவேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். இதனிடையே, ஒரு நேர்காணலில் தவெகவை ஆதரிக்கும் பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை விமர்சிக்கும் வகையில் பொன்ராஜ் பேசினார்.
“புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பெண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த, ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது” என்பது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!
அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக பெண்களை விலைமாதர்கள் என இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். திமுகவின் ஆதரவு காரணமா என்றும் கேட்டுள்ளார். தமிழ்நாட்டு பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்த பொன்ராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும்கூட, பொன்ராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதா எனவும் அன்புமணி சாடினார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!