வட தமிழ்நாடு கல்வியில் முன்னேறாவிட்டால் தமிழகம் எந்த துறையிலும் முன்னேறாது.. அன்புமணி எச்சரிக்கை..!
கல்வியில் வடதமிழ்நாடு முன்னேறவில்லை என்றால் தமிழகம் எந்த துறையிலும் முன்னேற முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10,11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்களை தடை செய்ய இடம் பிடித்துள்ளதாகவும் கல்வியில் எப்போதும் விடியல் கிடைக்கப் போகிறது என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களை பிடித்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். கல்வியில் வட தமிழகம் பின்தங்கி இருப்பது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல என்றும் 40 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலைதான் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு இல்லாததால்தான் தேசிய விகிதம் குறைந்ததற்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.. கல்வியில் வடதமிழ்நாடு முன்னேறவில்லை என்றால் எந்த துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: படுத்துக்கிட்டே ஜெயிக்கிற வித்தைய கத்து கொடுக்கட்டா? அன்புமணி செயல் தலைவர் தான்... ராமதாஸ் தடாலடி!