×
 

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம்...! முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியது என்ன.? அன்புமணி பேட்டி..!!

முதல்வர் விஜய்யை சந்தித்தது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார்.

சென்னையில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் மையப் பொருள் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பதாகும். அண்மையில் பாமக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் நேரில் அளித்து, அதைச் செயல்படுத்துமாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய பலன்கள் சென்றடையச் செய்வதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தற்போதைய இட ஒதுக்கீடு அமைந்துள்ள நிலையில், புதிய தரவுகள் இல்லாததால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்கவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும் புதிய கணக்கெடுப்பு அவசியம் என அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சமீபத்தில் சென்னையில் பாமக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமக..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசிய நிலையில் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுத்தால் தான் துல்லியமாக எடுக்க முடியும் என்றும் கூறினார். உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜயை சந்தித்து வலியுறுத்தியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: தூக்குல போடுங்க..! கோவையில் சிறுமி கொலை... அன்புமணி ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share