×
 

புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

இளம் தலைமுறையினர் புகைப்பிடிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அன்புமணி கடிதம் எழுதி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கியமான கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள், குறிப்பாக சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சட்டம் நடைமுறைக்கு வந்தால், எதிர்கால தலைமுறையினர் சட்டப்படி புகையிலை பொருட்களை அணுக முடியாமல் போகும்.

இதனால் புகைப்பழக்கமற்ற ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புகையிலை பயன்பாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியாக உள்ளது என்பதை அன்புமணி ராமதாஸ் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 26.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் என்ற அளவுக்கு அதிகம். ஒவ்வொரு ஆண்டும் புகையிலை நேரடியாக 1.35 மில்லியன் மரணங்களுக்கு காரணமாகிறது. மொத்தம் சுமார் 2.3 மில்லியன் மரணங்கள் ஏற்படுகின்றன. 

இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

புகையிலை பயன்பாடு புற்றுநோய், இதய நோய்கள், நாள்பட்ட சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணம் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மட்டும் புற்றுநோய் வழக்குகளில் 40-50 சதவீதம் புகையிலையால் ஏற்படுகின்றன என்றும், ஆண்டுக்கு 4.7 லட்சம் மரணங்கள் புகையிலை தொடர்பான புற்றுநோய்களால் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார். இளம் தலைமுறையினர் மீது இந்தப் பழக்கம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால், உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்! அன்புமணி பகீர் குற்ற்ச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share