×
 

பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்! அன்புமணி பகீர் குற்ற்ச்சாட்டு!

கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) திமுக மற்றும் அதன் தலைமையை குறிவைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “இபிஎஸ் முதல்வராக வந்தால் தான் பாலியல் சம்பவம் தமிழகத்தில் நடக்காது. அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலதா, இபிஎஸ் போன்றவர்கள் ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. சின்ன பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவமே நான் கேட்டது கிடையாது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கஞ்சா, அபின், போதைப்பொருள், மாத்திரை, பவுடர், அமெரிக்காவில் பயன்படுத்தும் போதைப்பொருள்கள் எல்லாம் இப்போது கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மட்டுமல்ல உங்கள் பேரனுக்கும் ஆபத்து வரும்.

இதையும் படிங்க: பெண்களே திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இருக்கா..? விளாசிய அன்புமணி..!!

ஸ்டாலின் ஆட்சியில் ஒரு பக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னொரு பக்கம் பார்லியில் மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட நகலை ஒரு முதல்வர் எரிக்கின்றார் என்றால் இதை விட தேச துரோகச் செயல் வேறு இருக்க முடியும். அவருக்கு பெண்கள் மீது எவ்வளவு வன்மம்.

இந்த இருவர் தான் தொடக்கத்தில் ஸ்டாலின் பிரசாரத்தில் சாதனைகள் பற்றி பேசினார், எடுபடவில்லை. அதன் பிறகு பாஜ வந்துவிடும் என்றார். அதுவும் எடுபடவில்லை. இப்போது இபிஎஸ் பற்றியும் என்னைப் பற்றியும் இழிவாகப் பேசுகிறார்கள். கடந்த ஒராண்டு காலம் பாமகவில் நடக்கிற குழப்பங்களுக்கு ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும்தான் காரணம்.

இவர்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தில் திட்டமிட்டு குழப்பம் செய்திருக்கிறார்கள். அதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கேடு கெட்ட ஊழல் ஆட்சியை அகற்றுங்கள். இபிஎஸ்ஐ முதல்வர் ஆக்குங்கள்.” இவ்வாறு அன்புமணி பேசினார்.

அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக அரசியல் களத்தில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இத்தகைய பேச்சுக்கள் தேர்தல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: என்னம்மா கண்ணு செளக்கியமா?... மல்லு கட்டும் அப்பா, மகன்... மாம்பழம் Vs சிலிண்டர் லாபம் யாருக்கு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share