கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
காவிரி ஆற்றின் மேல் பகுதியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்தார்.
மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் என்பதில் உறுதியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ், கடந்த சில நாட்களாக பிலிகுண்டுலு முதல் டெல்டா பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த பிரச்சனை தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியை பாதிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்த பின்பு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது, மேகதாது அணை கட்டக்கூடாது முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! அமைச்சர் ஆனந்தை சந்திக்கும் அன்புமணி..!!
மேகதாதுவில் அணைக்கட்ட ஏதேதோ பொய் சொல்கிறார் கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் என்று குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!