கொத்தடிமை திமுக திருந்தணும்! இல்ல திருத்துவோம்... சவால் விட்ட அன்புமணி!
சமூகநீதியை சிதைத்து கொத்தடிமை முறையை திராவிட மாடல் அரசு ஊக்குவிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது எனவும் குறைந்த அளவிலான நியமனங்களாவது நிரந்தர அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது., ஆனால், அதை செயல்படுத்தாத தமிழக அரசு, மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை நியமிப்பதை ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. போட்டு பொளக்கும் அன்புமணி..!
மெட்ரோ ரயில்களை இயக்குவதும், பராமரிப்பதும் மிகவும் நுணுக்கனான பணிகள்., இந்தப் பணிகளுக்கு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து பட்டயம் பெற்ற இளைஞர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவாக வழங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதியா என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏற்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் பணிகளையாவது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்பலாம். அதைக் கூட செய்ய முடியாது திமுக சமூக நீதி என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது எனக் குற்றம் சாட்டினார்.
திமுக அரசு இனியாவது திருந்த வேண்டும். மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!