அப்பா VS மகன்.. கட்சியும், தொண்டர்களும் யார் பக்கம்? மாஸ் காட்டும் அன்புமணி ராமதாஸ்..!
உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அன்புமணி ராமதாஸ் 13 நாட்களுக்கு பிறகு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. பாமகவின் நிறுவனராக இருக்கக்கூடிய ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வன்னியர் சங்க மாநாடு நடந்த பிறகு இந்த பிரச்சினைகள் தீரும் என எதிர்பார்த்த நிலையில், மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் பாராட்டாமல் இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து ராமதாஸ் தனது தைலாபுரத் தோட்டத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்ததால் கட்சியின் உட்க்கட்சி பிரச்சனை பூதாகரமாக மாறத் தொடங்கியுள்ளது. மேலும் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த செய்திக்கு மட்டும் மருத்துவர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீழும் வேளாண் வளர்ச்சி.. விவசாயத்தை அழித்தது தான் சிறப்பான சாதனையா? திமுக அரசை சாடும் அன்புமணி..!
அன்புமணி ராமதாஸ் வருவார். கூட்டத்தில் கலந்து கொள்ளுவார். அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித மனக்கசப்பும் இல்லை என்று மட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் ஏன் கலந்து கொள்ளவில்லை எப்போது கலந்து கொள்ளுவார் என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தர்மபுரியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். வழியெங்கும் பாமகவின் நிர்வாகிகள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ சாலை சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணிராமதாஸுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீளமான பாமக கொடியை பிடித்தவாறு வரிசையில் நின்று மலர் தூவியும் பட்டாசுகளை வெடித்தும் அசத்தினர். கிரேன் மூலம் ராட்சத மலர்மாலை அணிவித்தும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தலைவர் வாழ்க! வருங்கால தமிழக முதல்வர்! என முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
தொண்டர்களுக்காக காரிலிருந்து இறங்கி வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுகொண்டார். அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அன்புமணி ராமதாஸ் 13 நாட்களுக்கு பிறகு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!