அமைச்சருக்கு ஆஸ்கர் குடுங்கப்பா... விளாசிய அன்புமணி ராமதாஸ்...!
கரூர் சம்பவத்தில் தேம்பித் தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் கொடுங்கள் என அன்புமணி விமர்சித்தார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் சிலர் உடனடியாக கரூர் மாவட்டத்திற்கு விரைந்தனர். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு அழுதார். இந்த நிலையில், அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார். அமைச்சரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அன்புமணி, அமைச்சருக்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... ஜி.கே.மணிக்கு நேரடியாக சவால் விட்ட திலகபாமா...!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார் என்றும் அவருக்கு ஆஸ்கர் தரலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என்றும் நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!