அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!
ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பாமக எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமூகத்தின் முக்கிய அடையாளமாக இருந்தாலும், இன்று அதன் உள்ளார்ந்த பிளவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாசு மற்றும் அவரது மகன், அன்புமணி ராமதாசு இடையிலான குடும்ப மோதல், கட்சியின் அடித்தளத்தை குலைக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இது வெறும் தந்தை-மகன் பிரச்சினை என்று நினைத்தால் தவறு.
இது அதிகாரப் போராட்டம், குடும்ப உறவுகளின் சிதைவு, கட்சி நிர்வாகத்தின் குழப்பம் மற்றும் அடுத்தடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தல்களின் முன்னணி சவாலாக மாறியுள்ளது. இவர்களுக்குள் மோதல் வேகமெடுத்தது. 2025 ஜனவரி முதல், இரு தரப்பினரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நியமித்து, நீக்கினர். ராமதாசு, 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை நீக்கி, தனது ஆதரவாளர்களை அமர்த்தினார்.
அன்புமணி, இதை எதிர்த்து, கட்சி பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று அறிவித்து, தனது தரப்பினரை நியமித்தார். இதனால், பல மாவட்டங்களில் இரு தலைவர்கள், இரு செயலாளர்கள் என்ற நிலை உருவானது.
இதையும் படிங்க: “பை நிறைய பொய்” - அன்புமணியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்த ராமதாஸ் தரப்பு...!
கட்சியின் மாம்பழம் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம், மீண்டும் மோதலைத் தூண்டியது. இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தலைமைச் செயலாளரை ராமதாஸ் தரப்பு எம்எல்ஏக்கள் சந்தித்தனர். எம்எல்ஏ அருள் தலைமையில் மனு கொடுத்தனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மனு கொடுத்தனர். அன்புமணி தரப்பால் ராமதாஸிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளனர். தற்போது அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவா? பாஜகவா? தவெகா? - தைலாபுரத்தில் தீவிர ஆலோசனையில் ராமதாஸ்... மிஸ் ஆன ஜி.கே. மணி...!