×
 

திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

திமுக அரசு அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக இளைஞர்களுக்கு 'நம்பிக்கைத் துரோகம்' இழைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டே திமுக அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். திமுகவின் வாக்குறுதி: 2021 தேர்தல் அறிக்கையில், காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் மற்றும் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என மொத்தம் 5.50 லட்சம் அரசு வேலைகள் உறுதி அளிக்கப்பட்டன. பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், இதுவரை மொத்தம் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது திமுக அளித்த வாக்குறுதியில் வெறும் 17 சதவீதம் மட்டுமே. ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இது மிகப்பெரிய தோல்வி என அன்புமணி சாடியுள்ளார். அரசு வேலை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 5 லட்சம் வேலைகளைக் கூட திமுக அரசு உருவாக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!

திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு அக்கறை காட்டியதெல்லாம் Collection (வசூல்), Commission (கமிஷன்), Corruption (ஊழல்) ஆகிய மூன்றில் மட்டும்தான். இந்த ஊழல் பசியாலும், துரோகத்தாலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படித்த இளைஞர்களை ஏமாற்றிய இந்த அரசின் மீதான கோபமும், சாபமும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குப் பெரும் வீழ்ச்சியைத் தேடித்தரும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share